கனடாவின் வளர்ச்சியில்
தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு என கனடா பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கீச்சகம் மற்றம் முகநூலில்; காணொளி ஒன்றை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து
கூறியுள்ளார் தை திருநாள் பொங்கல் விழா உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு கனடா மற்றும்
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள காணொளியில்;, அனைவருக்கும்
வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கிய அவர், தமிழர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய
மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள
அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய
தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து பகிர்ந்து
உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



