Show all

சென்டினல் பழங்குடியினர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியுமா! ஜான் ஆலன் ஜாவ் கொல்லப்பட்டதற்காக,

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராசேந்திர சோழன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றி, சிறிவிஜயா பேரரசு, சுமத்ரா மற்றும் இந்தோனேஷியா தீவுகள் ஆகிய அரசுகளுக்கு எதிராக ஒரு கடற்படை தளமாக பயன்படுத்தினர். அவர்கள் இத்தீவுகளை தின்மைத்தீவு என்று அழைத்தனர்.

இந்தியாவுடன் அந்த தீவுகள் இணைவதற்கு பெறும் பங்கு வகிக்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முந்;தைய மராட்டிய பேரரசின் ஒரு தற்காலிக கப்பல் தளமாக அமையப் பெற்றதுதாம். கன்ஹோஜி ஒரு அடிப்படை கடற்படை மேலாதிக்கத்தை இத் தீவுகளில் நிலைநிறுத்தினார். 

இரண்டாம் உலகப்போரின் போது, தீவுகள் பெயரளவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆசாத் ஹிந்த் அதிகாரத்தின் கீழ், நடைமுறையில் ஜப்பான் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. போஸ் யுத்தத்தின் போது தீவுகளுக்கு வந்து தியாகிகள் தீவு மற்றும் சுய ஆட்சி தீவு என்று அவர் பெயர் மாற்றம் செய்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின், இந்திய தேசிய இராணுவத் தலைவர் லோகநாதன், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இந்தியக் காலாட்படை பிரிவு பிரிட்டிஷ் மற்றும் இந்திய படைகள் மூலம் மீண்டும் கைப்பற்றிய பின் சப்பான் காவற்படை சரணடைந்தனர்.

இந்தியா மற்றும் பர்மாவிலிருந்து, பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது.

தமிழ், தெலுங்கு, வங்காளம் மற்றும் ஜாரவா. செண்டினல், சாம்பென், ஒன்கே மற்றும் அந்தமானிய பழங்குடி மக்களால் எழுத்து வழக்கு இல்லாத மொழிகளும், ஹிந்தி, ஆங்கிலமும் பேசப்படுகின்றன இந்தத் தீவுகளில். 

அந்தமானில் பல சிறிய தீவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடக்கு சென்டினல் தீவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கிருப்பவர்களுக்கும் வெளியாட்களுக்கும் தொடர்பில்லை. சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சென்டினல் தீவு கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சென்டினல் தீவுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறியதால் அமெரிக்கர் ஜான் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது சென்டினல் என்றழைக்கப்படும் பூர்வகுடிகள். 

தீவுக்குள் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், மீன், தேங்காய் உள்ளிட்டவையே இவர்களின் உணவு. மரப்பட்டைகளைத்தான் ஆடைகளாக அணிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் கற்காலத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் மனித நாகரிகத்தில் இவர்கள் எவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை அறியலாம். சென்டினல் பூர்வகுடிகள் தங்கள் இடத்தை விட்டு வெளியே வரவும் மாட்டார்கள், தங்கள் இடத்திற்குள் வேறு யாரும் நுழைவதை அனுமதிக்கவும் மாட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பே இன்றி வாழ்கின்றனர். வேற்று மனிதர் சென்டினல் தீவில் கால் வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை.

சென்டினல் பூர்வகுடிகள் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப் பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள். அந்தத் தீவில் சுமார் 150 பேர் வரை வசிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தங்கள் இடத்திற்கு வருபவர்களை சென்டினல் தீவு பூர்வகுடிகள் கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஆழிப்பேரலையின் போது தங்களை மீட்க வந்த அதிகாரிகளைக்கூட பூர்வகுடிகள் தாக்கினர்.

வழிதவறி வந்த இரண்டு மீனவர்களை பூர்வகுடிகள் கொலை செய்தனர். மீனவர்களின் உடலை எடுக்கச் சென்ற கடலோர பாதுகாப்புப்படை உலங்கு வானூர்திகள் மீதே அம்பு எய்திருக்கின்றனர் சென்டினல் பூர்வகுடிகள். அப்படி என்றால் வேற்று மனிதர்கள் யாரும் சென்டினல் தீவுக்குள் நுழைந்து விட்டு உயிரோடு திரும்ப முடியாதா? அதுவும் ஒருமுறை நடந்திருக்கிறது.

பூர்வகுடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய தேங்காய்களை மட்டும் சென்டினல் பூர்வகுடியினர் பெற்றுக் கொண்டனர். அந்தக் குழுவினரை பூர்வகுடிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதன்பிறகு சென்டினல் தீவுக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. பூர்வகுடிகள் நாகரிக வளர்ச்சி பெற்றவர்களை வேற்று மனிதர்களாகவே பார்க்கின்றனர். அவர்களின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கூட முழுமையாக இல்லை. அறிவியலும் நாகரிகமும் அசுர வளர்ச்சி பெற்று விட்ட இந்தக் காலத்தில் சென்டினல் பூர்வகுடிகள் அதிசயமானவர்கள்தான்.

அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அமெரிக்கர் ஜான் ஆலன் ஜாவ் பூர்வகுடிகளால் கொல்லப்பட்டதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்பு ஒன்று, சென்டினல் பழங்குடியினர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்க அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.