புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் இலங்கை பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனிதா தற்கொலை சம்பவம் அமெரிக்காவில் உள்ள தமிழர்களையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. நியூஜெர்சி, மிக்சிகன், அட்லாண்டா, கலிபோர்னியா, சிகாகோ, புளோரிடா உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் தமிழர்கள், அனிதா மரணத்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். மேலும் அனிதா சாவுக்கு நீதி கேட்டு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடுவண் பா.ஜ.க அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர். இதேபோல் பல்வேறு நகரங்களில் வாழும் தமிழர்களிடம் கையெழுத்து பெற்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் அளிக்க உள்ளதாகவும், அடுத்தகட்டமாக இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் அமெரிக்க வாழ் தமிழர்கள் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



