22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறி வருகிறார். போரிஸ்கா கிப்ரியானோவிச் என்ற வோல்கோகிராடைச் சேர்ந்த 20அகவை இளைஞர், பிறந்த சில மாதங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டதாகவும், இரண்டு அகவையிலேயே எழுதப் படிக்க பழகிக் கொண்டதாகவும், கடினமான விசயங்களை விவாதிக்கும் திறனை சிறுவயதிலேயே பெற்றிருந்ததாகவும் அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். வேற்று கிரகவாசிகள் குறித்தும் அவர் பல வியத்தகு விவரங்களை கூறி வருகிறார். விஞ்ஞானிகள் போரிஸ்காவை வியப்புடன் அணுகி விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம். இது குறித்து போரிஸ்கா கூறுகையில், செவ்வாய்கிரகத்தில் ஏழு அடி உயரமுடைய மனிதர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 35 அகவைக்;கு பிறகு முதுமை வருவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், பூமியில் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் பிறந்து வசித்து வந்தேன் என்கிறார். அப்போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. ஆணு ஆயுத போர் நடைபெற்றது. இதனால் அங்கிருந்த அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதில் பலர் உயிரிழந்தனர், சிலர் தப்பி பிழைத்தனர். சுவாசிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு அங்கு உள்ளது. அதுமட்டுமின்றி நீர் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் கூறியதற்கு எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இல்லை. செவ்வாய் கிரகத்தில் நான் வாழ்ந்தபோது ஏற்பட்ட காயம் தான் இது என்று தனது தோளில் உள்ள காயத்தின் தழும்பை காட்டுகிறாராம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



