01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கே, ஏதோ கொஞ்சம் ஈழத்தமிழர்களுக்கும் செவிமடுக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக 1.ராஜபக்சேவை தலைமை அமைச்சராக ஆக்குதல் 2.பாராளுமன்றத்தை கலைத்தல் 3.ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தல் ஆகிய மூன்று வகையான சோதனை முயற்சிகளை மேற்கொண்டும், ரணில் விக்கிரம சிங்கேவை வெற்றி கொள்ள முடியாமல், மைத்திரிபால சிறிசேனா பணிந்தார். இதையடுத்து பொம்மை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகினார் நேற்று. ரணில் விக்ரமசிங்கே இலங்கை தலைமை அமைச்சராக இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.