சிம்பியான் இயங்குதளம் கொண்ட நோக்கியா பேசிகள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 ஆகிய பேசிகளில் கட்செவிஅஞ்சல் சேவை டிசம்பர் 31-ம் தேதியுடன் துண்டிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்-அப்) அரட்டைச் சேவையை உலகளவில் அதிகம் பேர் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பியன் இயங்குதளம்; கொண்ட பேசிகள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 ரக பேசிகளில் டிசம்பர் 31-ம் தேதிக்கு மேல் கட்செவிஅஞ்சல் சேவை செயல்படாது என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கண்ட இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் தங்கள் சீர;மிகு பேசிகளை தரம் உயர்த்துமாறு கேட்டுக் கொண்டிருக்கும் கட்செவிஅஞ்சல் நிறுவனம் கட்செவிஅஞ்சல் சேவை துண்டிக்கப்படவிருக்கும் பேசிகளைப் பற்றிய விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது. கட்செவிஅஞ்சல் சேவை துண்டிக்கப்படவுள்ள செல் பேசிகளின் பட்டியல்: பிளாக்பெர்ரி-OS மற்றும் பிளாக்பெர்ரி-10 நோக்கியா S40 நோக்கியா S60 ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 விண்டோஸ் தொலைபேசி 7.1 ஆப்பிள் ஐ-போன் 3GS மற்றும் ஐ-போன்கள் 6iOS மேலும், நோக்கியா E6 நோக்கியா 5233, நோக்கியா C503, நோக்கியா ஆஷா 306 மற்றும் நோக்கியா E52 ஆகிய நோக்கியா மாடல் போன்களிலும் இனி கட்செவிஅஞ்சல்; வசதி தடை செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்பேசிகளிலும் கட்செவிஅஞ்சல் சேவை இனி செயல்படாது. சிம்பியன் இயங்குதளம் தொழில்நுட்பம் கொண்ட பேசிகளில் சில தொழில்நுட்ப வசதி இல்லாததால் கட்செவிஅஞ்சல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



