Show all

தவறான செயல்! விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து, பொதுமக்களால் எரிக்கப்பட்டுள்ளது

சென்னை ஆவடி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து, பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட தவறான செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையை அடுத்த ஆவடி அமுதூர்மேட்டில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தைப் பொதுமக்கள் தீ வைத்து எரித்த பிழையான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அமுதூர்மேட்டில் கார்த்திக் (அகவை 42) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கார்த்திக் மீது மோதியது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை பொதுமக்கள் முதலில் தாக்கினர்.

பின்னர் திடீரென தீ வைத்தும் எரித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்தப் பிழைச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.