மலேசிய நாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று கட்டுமானத்துறை சார்ந்தவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காலப்போக்கில் பெருகி வரும் கட்டிடங்களால், மணல்தட்டுப்பாடு மிகுந்து கொண்டே வருகிறது தமிழகத்தில். மணலுக்காக காவிரி வடிகால் பகுதிகளை ஆனவரை வீணடித்து விட்டோம். தற்போது கருங்கல் தூள் மணலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே கல்லுடைப்பு இயந்திரங்களை அமைத்து மலைகள் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். மலையை அழித்து மழையை இழக்கும் நடவடிக்கையில் தமிழகம் மிகுதியாக ஈடுபட்டு வருகிறது. இதனால் மணல் கிடைக்கும் நாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்து கொள்ளுங்கள். தமிழகத்தை இயற்கை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் என்ற விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் சான்றோர் பெருமக்களிடையே எழுந்துள்ளது. இந்த அடிப்படையில்: தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட மலேசியா நாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்து அதை தமிழக அரசே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கம் தீர்மானமாக நிறைவேற்று தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,285.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



