Show all

மெரினாவில் இடம் கிடைக்குமா! தலைவர்களுக்கு மெரினாவில் சமாதி என்ற சித்தாந்தத்தின் மூலமுதல் கலைஞருக்கு

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பதை தமிழக மக்கள் நூறு விழுக்காடும் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை.

திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பது சிக்கலாக்கப் பட்டிருப்பதற்கு திமுகவின் வழக்குகளைத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி கோடிட்டு காட்டி இடமளிக்க மறுத்திருக்கிறார்.

தற்போது திமுக தனது அனைத்து வழக்குகளையும் திருப்பப் பெற்று எடப்பாடியாரின் வாதத்திற்கு வாய்ப்பில்லாமல் செய்திருக்கிறார்கள். வெளியில் உள்ள டிராபிக் ராமசாமியின் வழக்கையும் அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. திமுக வின் அனைத்து வழக்குகளும் திருப்பப் பெறப்பட்டதால், செயலலிதா சமாதியை அழகுபடுத்துவதற்கு எதிரான வழக்குகளும் காணமல் போகிறது. 

அதிமுக தரப்பு மனமுவந்து கலைஞருக்கு மெரினாவில் இடமளிக்க எந்த வகையான (காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட) காரணங்களும் அடிபட்டு போயிருக்கிறது. 

இந்தியாவில் மிகப் பழைய அரசியல் வாதிக்கு, மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி என்பற்கே வித்திட்டவருக்கு, மாமனிதர் கலைஞர் கருணாநிதிக்கு இடம் தாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே!  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.