சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி செங்குன்றம் பகுதியில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை பகுதியில் அதிகாலை வரை 7.2 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் 5.5 செ.மீ, மீனம்பாக்கம் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், சோழாவரம் பகுதியில் 5.5 செ.மீ மழையும் பெய்துள்ளது. மெரினா கடற்கரையில் மூன்று ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில்தான் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்தது. அதில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் எளிதாக வாகனங்களை இயக்க முடியவில்லை. தயவுகூர்ந்து பயணத்திட்டம் இருந்தால் தள்ளிப்போட்டு விட்டு பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



