Show all

முதலாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது! திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதலாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

20,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு கலந்துரையாடல் இன்று நடந்தது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: (06.04.2021) அன்று நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தொகுதி பங்கீடு கலந்துரையாடல்கள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் கருத்துப்பரப்புதல் என பரபரப்பாகக் காணப்படுகின்றது அரசியல் களம்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ்,  மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கலந்துரையாடல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.