கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளிநாட்டினர்களைத் தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது. 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளிநாட்டினர்களைத் தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 21 அன்று கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் ஜக்கிவாசுதேவ் மூலம் சிவராத்திரி விழா நடந்தது. இந்த விழாவில் 5000 பேர் வரை கலந்து கொண்டனர். இதில் பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட இங்கு பலர் வந்துள்ளனர். பல பேரறிமுகங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுக்க சிவராத்திரி அன்று, இந்த விழா நடந்தது. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. முதன்மையாக வெளிநாட்டு பயணிகள் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நேற்று கோவை ஈசா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு எத்தனை வெளிநாட்டு பயணிகள் உள்ளனர், வெளி மாநில பயணிகள் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் என்று சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த சோதனைக்கு பின் 150 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடன் தொடர்பு கொண்ட உள்நாட்டு பயணிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அங்கு சிவராத்திரி விழா மட்டுமின்றி, ஈசா மையத்தில் பேரறிமுகங்கள் கலந்து கொண்ட வேறு சில விழாக்களிலும் கலந்து கொண்டு உள்ளனர். இது குறித்து ஈசா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் விழாவில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களை அனுமதிக்கவில்லை. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட வேறு சில நாடுகளுக்கு சென்றவர்கள் அனுமதிக்கவில்லை. கொரோனா பாதித்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி ஏறியவர்களை கூட அனுமதிக்கவில்லை. முறையாக நாங்கள் விதிகளை கடைபிடித்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையினாலேயே அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் அறிக்கை எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல சொல்ல முயல்கிறது. அவர்களுக்கு முன்னேமேயே கொரோனா பாதிப்பு குறித்து தெரிந்திருந்தும் வெளிநாட்டினரை நிகழ்ச்சிக்கு அனுமதித்து தவறு செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



