தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தனி அறங்கூற்றுவர் மறுத்துவிட்டார். அறங்கூற்றுவர் மறுப்புக்கான காரணம் எதுவானாலும் இருக்கட்டும். மறுத்தது நல்லதே. 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமஸ்கிருத மந்திரங்களில் சமூக ஏற்றதாழ்வு. முறையற்ற பாலியல் செய்திகள் நிறைய காணப்படுகின்ற தன்மையை, திராவிட இயக்க மேடைகளில், பெரியார் காலத்தில் ஏராளமாக கேட்டுவிட்டோம். பெரியார் காலத்தில் எல்லாம்- சமஸ்கிருத மந்திரங்களில் உள்ள இழிவுகளுக்காக உரியவர்கள் வெட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாஜக காலத்தில், அதையெல்லாம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். பாஜகவினரின் ஆதிக்கபாட்டு நிலையில்- சமஸ்கிருத மந்திரங்களில் உள்ள இழிவுகளை ஆய்வு செய்யத் தொடங்குவோமேயானால் அவர்கள் வேறுவகையாக நம்மை தாக்கத் தொடங்குவார்கள். நமது கோயில்கள் முள்ளின் (சமஸ்கிருதம்) மீது விழுந்து விட்டது. மெல்ல மெல்ல மீட்டெடுப்பதே நன்று. இப்போதைக்கு தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் தமிழுக்கு இடம் கிடைத்தது நமக்கான வெற்றியாகும். தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். மந்திரங்களை தமிழில் சொல்லும் போது தான் அதன் பொருளை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி திருவள்ளூரை சேர்ந்த மணிகாணந்தா என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். சமஸ்கிருத மந்திரத்தில் உயர்வான நல்லபல கருத்துருக்கள் இருக்கும். அதை தமிழிலும் தெரிந்து கொள்ளலாமே என்று நம்பி, முன்னெடுக்கப்படும் இந்த நோக்கம் சரியானதுதான். சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்தால் வினையாகிப் போய்விடும் என்பதை திராவிட இயக்கத்தினர் மட்டுமே நன்கு அறிவார்கள். ஏனென்றால் அவர்கள் பல சமஸ்கிருத மந்திரங்களை மொழிபெயர்த்து மேடையும் ஏற்றி விட்டார்கள். இந்த மனு அறங்கூற்றுவர் சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த முன்னெடுப்பு தொடர்பாக உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தள்ளதாகவும், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளதா எனவும், எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது எனவும் மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய அறங்கூற்றுவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். மேலும், மனுதாரர் ஹிந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறியதால், இந்த வழக்கை பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட தலைமை அறங்கூற்றுவருக்குப் பரிந்துரைத்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



