நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் வெளியானது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய், அது ஒரு வதந்தி என்று நடிகர் யோகி பாபு தெரிவித்திருந்தார். எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிற்கு இன்று திருமணம் நடைபெறும் என்ற நம்பத்தன்மையான தகவல்கள் வெளியானது. அதுகுறித்து யோகிபாபுவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனிடையே நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபுவின் திருமணத்தில் தர்மபிரபு இயக்குனர் முத்துகுமரன். மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதையடுத்து நடிகர் யோகி பாபுக்கு அவரது திரைஆர்வலர்கள், மற்றும் திரையுலகினர் சமூக வலை தளங்கள் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து இணையத்தைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



