Show all

தானி ஓட்டுநருக்கு அடி உதை! தமிழிசையிடம் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கேள்வி கேட்ட நியாயத்திற்காக

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த தானி ஓட்டுநர் கதிர் என்பவர், பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே! என்று கேள்வி எழுப்பினார். 

தானி ஓட்டுநரின் கேள்வியைக் கேட்டும் கேட்காததுபோல தமிழிசை இருந்தார். தானி ஓட்டுநர் விடவில்லை. மீண்டும் அவர் கேள்வி எழுப்ப, தமிழிசையின் அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்குக் கோபம் வந்தது. அகவை முதிர்ந்தவர் கதிரை ஒதுக்குப்புறமாகக் கொண்டு சென்று கடுமையாகத் தாக்கினர். தந்தை அகவையில் உள்ள தானி ஓட்டுநர் தாக்கப்படுவதை அறிந்தும் கண்டும் காணாதது போல தமிழிசை சம்பவ இடத்தைவிட்டு நகர்ந்தார்.

சைதாப்பேட்டையில் நடந்த இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருப்பவர்கள் செய்து வரும் அடவடிச் செயல்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.

தாக்கப்பட்ட தானி ஓட்டுநர் கதிர், பெட்ரோல் விலை உயர்வால் குடும்பத்தை நடத்துவதே பாரமாக இருக்கிறது. அன்றாட வருமானத்தில் பெரும் பகுதி பெட்ரோலுக்கே செலவழிக்க வேண்டியது இருக்கிறது. பெட்ரோல் விலை குறித்து கேட்டால் அகவை முதிர்ந்தவர் என்றுகூட பார்க்காமல் அடிக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,913.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.