Show all

முதல்வருடன், மு.க.ஸ்டாலின் அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தி.மு.க தலைவர் கலைஞர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில்,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மு.க.ஸ்டாலின் அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து விட்டு மீண்டும் காவேரி மருத்துவமனை திரும்பினர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழியின் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது

கலைஞர் உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு பிறகு கலைஞர் உடல் நிலை குறித்து முதன்மை செய்திக்குறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்

காவேரி மருத்துவமனை முன்பு தி.மு.க தொண்டர்கள் திரண்டுள்ளனர் - சோகத்தில் பலர் கதறி அழுகின்றனர்

ஸ்டாலின் சந்தித்து சென்ற நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு

தற்போது காவேரி மருத்துவமனையில் தி.மு.க நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு காவேரி மருத்துவமனை வளாகத்தில் காவலர்கள் குவிக்கப் பட்;டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.