28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடுவண் அரசுக்கும் தமிழகத்திற்குமான உறவு- விடுகதை விளையாட்டு ஆகிவிட்டது. தமிழர்கள் எது கேட்டாலும் கொடுக்காததும், தமிழர் வேண்டாம் என்று சொல்லுவதை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று முரண்டு பிடிப்பது எது? நடுவண் அரசிடம், தமிழர் கேட்டும் தராதது என்ன? கேட்காமல் தருவது என்ன? காவிரி மோலாண்மை வாரியம்! ஹைட்ரோகார்பன் கிணறு என்று நிறைய விடுகதைகளை அமைத்து பொழுது போகாத நேரத்தில் நாம் விளையாடலாம். தமிழகத்தில் மேலும் 24 ஹைட்ரே கார்பன் கிணறுகளுக்கு நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளதற்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் அளித்த பேட்டியில், ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக நாகை, திருவாரூர் அடங்கிய மாவட்டத்தை ‘நிலத்தடி நீர் எரிவாயு மண்டலம்’ என மத்திய அரசு அறிவித்து அரசாணையை வெளியிட்டுவிட்டது. முதல்கட்டமாக 4099 சதுரமீட்டரில் 24 எரிவாயு கிணறுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்டால் நீராதாரம் பாதிக்கப்பட்டு வேளாண்தொழில் முற்றிலும் அழிந்து விடும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நடுவண் அரசு தற்போது மேலும் 24 இடங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழர்களை இளிச்சவாயன் என எண்ணுகிறதோ? என்று நினைக்க தோன்றுகிறது. இதனை நாங்கள் மூர்க்கத்தனமாக எதிர்ப்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நேற்று, நாகூரில் அளித்த பேட்டி: தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மே மாதம் பணி நடைபெற உள்ளது. இது குறித்து முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்து வருகிறது. இதை கண்டிக்கிறோம். மு.க.ஸ்டாலின் கூறியதைபோல அதிமுக., தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,724
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



