13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் நாள் மற்றும் மே நாளில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செவிலியர்கள் நடுவே பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து போராட வேண்டும். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று பேசினார். எல்லா தொலைக் காட்சிகளிலும் தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையை கண்ணால் பார்த்தோம், காதாலும் கேட்டோம். தீர விசாரிக்கவும் செய்தோம் அனைத்தும் ஒன்று போலவேதான் இருந்தது. நேற்றைக்கு இங்கிலாந்து செய்திஇதழ், இன்றைக்கு ஐநாஅவை கண்டனம் அவைகளும் கூட ஒன்று போலவேதான் இருக்கின்றன. பச்சைமையில் கையெழுத்துப் போட்டு ஆலையை மூட வக்கில்லாமல், தானியங்கி துப்பாக்கியை வைத்து, போராடிய மக்களைப், பச்சைப் படுகொலை செய்த நீங்களும், உங்களுக்கு அதிகாரம் வழங்கிய எச்.ராஜா வகையறாக்கள் மட்டுந்தாம் வேறு வகையாகப் பேசினீர்கள் உங்களிடம் மட்டுமே விசாரித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறீர்களா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



