Show all

சோதனை எலியாக பன்னீரை தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கிறீரா முதல்வரே! பலியானது மக்கள்தாமே

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் எடப்பாடியாரின் வழக்கையும் சந்திக்க தயாராகி, தமிழக எதிர்க்கட்சித்தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று காலை திரும்பப்பெறப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக இன்று இரவு விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் ஓ.பன்னீர் செல்வம் கோவில்பட்டியில் தங்குகிறார். அதன்பின் நாளை காலை தூத்துக்குடி சென்று அங்கு மக்களை சந்திக்க உள்ளார். 

சோதனை எலியாக பன்னீரை தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கிறீரா முதல்வரே! பலியானது மக்கள்தாமே? நீங்கள் அனுப்பி வைத்த காவல்துறையினருக்கு பாதிப்பில்லையே? எங்களை நம்பலாம்; உங்களை தான் நாங்கள் நம்பியிருக்கக் கூடாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.