Show all

குழந்தைகளுக்கும் கரோனா! இதுவரை 142குழந்தைகள். என்ன நடக்கிறது தமிழகத்தில்

மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின் செயல்பாடு.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள். மொத்தமாக 142 குழந்தைகள். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. 

அப்படியானால் இந்த 38நாள் ஊரடங்கு சாதித்தது என்ன? ஊரடங்கிற்கு 100 விழுக்காடு விலைகொடுக்கிற மக்களுக்கே இதில் 100விழுக்காடும் பாதிப்பு. 

இதில் துளியும் ஈடுபாடாது, அதிகாரப்பாட்டில் ஊரடங்கு மட்டும் அறிவித்து விட்டு ஹிந்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிற நடுவண் பாஜக அரசு 100 விழுக்காடும் பிழையானதாக இருக்கிறது. 

மிக அதிகமாக வேலை செய்திருக்கிற மாநில அரசு உள்ள தமிழகத்திற்கே இந்த கதி என்றால், மற்ற மாநிலங்கள் நிலை, அதுவும் பாஜகவே ஆளும் மாநிலங்களின் நிலையெல்லாம் சொல்லவே வேண்டாம்.

இன்னும் பலநாட்கள் மக்கள் ஊரடங்கிற்கு விலைகொடுக்கத் தயாராகவேண்டும். இவர்கள் (பாவப்பட்;ட மாநில அரசும், துளியும் கவலை இல்லாமல், கொரோனாவிலும் மதம், ஹிந்தி ஆதிக்கத்தை முன்னெடுக்கும் நடுவண் பாஜக ஆதிக்க அரசும்)  அனுபவப்பட்டு, கற்று, அறிவு பெற்று புதிய யுக்திகளைக் கண்டுபிடித்து கொரோனா விரட்டுவதற்கு.   

கொரோனாவைத் தொடங்கி வைத்த சீனா- சுளுக்கு வலிபோய் திருகு வலி வந்த கதையாக அதிகாரப்பாட்டில் ஊரடங்கு அறிவித்துவிட்டு கொரோனா பாதிப்பு சென்று, பொருளாதார பாதிப்பை தந்து விட்ட நடுவண் அரசு பாஜக, கொரோனா முதலில் கொண்டுவந்தவர்களின்- கொரோனா பரப்பும் பொறுப்பற்ற செயல்பாடுகள் வரலாற்றில் பதிவாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.