Show all

பொது மக்கள் வரவேற்கிறார்கள்! தவறுக்கு தண்டனை என்கிற நிலையை மாற்றி, திருந்த வாய்ப்பு என்பதான தீர்ப்பை

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்;துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்துக் காவலர்களுடன் நின்று போக்குவரத்தைச் சரிசெய்ய அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனத்தை செல்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டி வந்த வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர் சுதர்சனை, போக்கு வரத்துக் காவலர் ஒருவர், வழிமறித்து சாவியைப் பிடுங்கியதால், தான் பெரும்புள்ளி நபர் என்கிற தெனாவெட்டில்,  அந்தக் காவலருடன் விவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு மூன்று போக்குவரத்து காவலர்கள் சேர்ந்து விட்ட நிலையில், 

அவரை கைது செய்த காவல் துறையினர் அறங்கூற்றுமன்றத்தில் அவரை அணியப்படுத்தினர். அவரது வழக்கை விசாரித்த அறங்கூற்றுத்துறை நடுவர் இயல்பாக தவறுக்கு தண்டனையே வழங்கப் பட்டு வருகிற நிலையில், அவருக்கு திருந்தும் ஒரு வாய்ப்பாக, 

சுதர்சன், போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து கோவை முதன்மைச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும், அன்றாடம் பணியை முடித்து சரியாக பணியாற்றியதாக அதிகாரி முன் கையொப்பமிட்டுச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டார்.

அறங்கூற்றுமன்ற நடுவரின் உத்தரவை அடுத்து இன்று காலைமுதல் வேகாத வெயிலில் கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு வேர்க்க விறுவிறுக்க போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் சுதர்சன் ஈடுபட்டார்.

அறங்கூற்றுமன்ற நடுவரின் இந்த உத்தரவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.