16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார் தே.மு.தி.க-வின் தலைவர் விஜயகாந்த். அப்போது. நடத்துனரிடம் 500 ரூபாய் கொடுத்து தொண்டர்களுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்தார். தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடவே, நேற்று சொற்ப அளவில் விலை ஏற்றத்தைக் குறைத்தது. பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கூறினார். ஆனால், இதைப் பல்வேறு அரசியல் கட்சிகள், வெறும் கண்துடைப்பு. திட்டமிட்டபடி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையொட்டி, பேருந்து கட்டண உயர்வுக்கு தே.மு.தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகை தந்தார். அப்போது விஜயகாந்த், ஆலந்தூரிலிருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, தனது சட்டை பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து, தொண்டர்களுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்தார் விஜயகாந்த். நல்ல மக்கள் தலைவர்; என்ன தான் ஆனது அவர் உடல் நலத்திற்கு! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,682
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



