Show all

நாளை தண்ணீர் லாரிகள் வழக்கம் போல் இயங்கும்!

தண்ணீர் லாரிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, பாதுகாப்பும் இல்லை என்பதாக, ‘வேலை நிறுத்தம் இல்லை’ ஆனால் தண்ணீர் லாரிகள் இயங்காது என்ற லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனவே நாளை தண்ணீர் லாரிகள் வழக்கம் போல் ஒடும். 

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் வேறு இடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்யக்கூடிய சூழல் நிலவுகிறது. 

இதற்கு தண்ணீர் லாரிகளின் பங்கு மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்தது. தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 5,000 லாரிகள் இயக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் பொதுமக்களுக்கு பல கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தண்ணீர் எடுக்க இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

இதனால் கொதிப்படைந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும், இல்லையெனில் நாளை முதல் தண்ணீர் லாரிகளை இயக்க முடியாது என்று அறிவித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த மாநில அரசு, லாரி உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தண்ணீர் லாரிகள் இயங்காது என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,206.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.