02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் அவர்கள். அண்ணா தனது கட்சியான திமுக பதவி யேற்றதும், தமிழ்நாடு என பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போராட்டத்;திற்கு பெருமை சேர்த்தார். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் உணர்ச்சிகரமான ஒருமித்த ஆதரவுடன், தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டினார் அண்ணா, மூன்று முறை தமிழ்நாடு எனப் பேரவையில் தமது வெண்கலக் குரலில் எழுச்சி முரசம் கொட்ட, சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என முழக்கமிட்டது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சீர்மிகு வரலாறு. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்ட இன்றைய நாளில், தமிழ்நாட்டின் பெருமைகளையும், உடைமைகளையும் மீட்க என்னென்ன செய்திருக்கிறோம் என்று நினைவு கூற வேண்டியது நம் கடமை. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், முதல்வராக இருந்த அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் அனைத்து உரிமைகளும் நடுவண் அரசிடம் அடகு வைக்கப்பட்டுள்ள அவமானகரமான நிலையில் - மிச்ச சொச்சமுள்ள உரிமைகளையும் நடுவண் அரசு பறித்து வருகின்ற ஆபத்தான சூழலில், அந்த உரிமைகளை எப்பாடுபட்டேனும் பாதுகாக்கவும் மீட்கவும் திமுக உறுதியேற்றுச் செயல்பட்டு வருகிறது. ஆவணி 14 (ஆகஸ்ட்30) அன்று நடைபெறவுள்ள மாநில உரிமைகள் - தேச ஒற்றுமை மாநாட்டில் இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்புடன் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுதும் எதிரொலித்திடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம். உரிமைகளை மீட்டு, அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாட்டின் பெருமைகளைக் காப்போம். தாய்க்குத் தனயன் பெயர் சூட்டிய தனிச் சரித்திரம் அல்லவா அது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



