பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது, ‘வித்யாசாகர் ராவ் நடுநிலை தவறாமல் நேர்மையாக பணியாற்றினார். ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர். பொதுமக்கள் ஆளுநர் மாளிகையைக் கண்டு களிப்பதற்கு அனுமதித்ததற்கான சிறப்பும் அவருக்கு உண்டு’ என்று அவர் கூறினார். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். நல்ல ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழ்நாட்டில் நடுவண் அரசு நிகழ்த்திய பல அரசியல் மாறுதல்களில் பாவம் பந்தாடப் பட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



