Show all

டீ குடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை  கவுன்சிலின் 36-வது அமர்வில் பேசிய வைகோவிடம் சிங்களர்கள் தாக்க முயற்சி செய்தனர். இதனால் இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மே 17 இயக்கத்தின்  திருமுருகன் காந்தி, பிரவீன்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு செல்லும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் போது நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் வந்த காவலர்கள் அவர்கள் மூன்று போரையும் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்புதான்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.