Show all

சசிகலாவின் மூன்று சூளுரைகள் இவை தான்!

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ‘சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

     சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சசிகலா அவர்கள் சூளுரை ஏற்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.