Show all

செல்பேசி படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! செல்பேசியால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து எங்குமாம்பட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது செல்பேசியை 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கை தவறி போட்டுள்ளார். செல்பேசியை எப்படி எடுக்க முடியும் என்று முயற்சித்துக் கொண்டிருந்து போது, அன்பழகன் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அன்பழகனின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி அன்பழகனை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,929.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.