17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பக்தி, மதம், ஆன்மீகம் இந்த மூன்றையும் ஒரு சாதாரண மனிதனாக ஆய்வு செய்தோமானால், புதிய கட்சி தொடங்க முயன்றிருக்கும் ரஜினியின் இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எந்த நோக்கமும் இல்லாமல், பழனியில் தொடங்கி, திருப்பதி, மாதேசுவரன் மலை, நாகூர், வேளாங்கன்னி வரை பாரபட்சம் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் சென்று வணங்கி வருகிற வழிபாட்டு முறைதாம் பக்தி மார்க்கம். இது தமிழக மக்களுக்கு உடன் பாடனதுதாம். கிறித்துவம், மகமதியம், சீக்கியம், புத்தம், சமனம் இந்த மதங்களைத் தோற்றுவித்தவர்கள் ஆன்மீக வாதிகள் ஹிந்து மதம் என்று யாராளும் தோற்றுவிக்கப் படவில்லை. இந்தியாவில் முகமதியர் காலூன்றிய போது, இந்தியாவில் புழக்கத்தில் இருந்து கொண்டிருந்த பல்வேறு சமய நெறிகளை ஒட்டு மொத்தமாக ஹிந்து என்று அவர்கள்தாம் குறிப்பிட்டனர். அதை தொடர்ந்து, இந்தியாவில் இருக்கிற கிறித்துவம், முகமதியம், புத்தம், சமனம், சீக்கிய மதம் சாராத அனைவரையும் ஹிந்து என்று பட்டியலில் அடக்கி வருகிறோம். உலகம் முழுவதும் கிறித்துவத்தையும் மகமதியத்தையும் தூக்கிப் பிடிப்பதும் வன்முறையை தூண்டுவதும் ஆன நாடுகள் பல உள்ளன. இந்தியாவில்; ஹிந்து மதக்கட்டுமானத்தை உருவாக்கி இந்தியாவை ஹிந்து மத அடிப்படையில் எடுத்துச் செல்ல பாஜக முனைந்து வருகிறது. அரவிந்தர், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஆதிசங்கரர், வாரியார், வேதாத்திரி, ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், பாபாராம் தேவ், நித்தியானந்தா, போன்றோராக - இந்தியாவில் ஹிந்துமதம் யாராலும் தோற்று விக்கப் படவில்லை என்ற காரணத்தால், ஹிந்து மத ஆன்மீகவாதிகள் என்று நல்லதும் கொட்டதுமாக நிறைய பேர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை சிறு சிறு கூட்டமாக பலரும் பின்பற்றி தங்கள் வாழ்க்கை செழுமை அடைந்து விட்டதாக பெருமை பீற்றி கூட்டம் சேர்த்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகின்றன. இப்படி ஒரு கூட்டத்தில் தான் ரஜினியும் சிக்கியிருக்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ரஜினி சேர்ந்திருக்கிற அந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியனோ வேறு ரஜினி ரசிகர்களோ யாரும் இன்னும் உள் நுழையவேயில்லை. தமிழ் மக்களிடம் ஓட்டு வாங்கி அந்த அதிகாரத்தில் ஒவ்வொருவராக அந்தக் கூட்டத்திற்குள் கொண்டு வந்து தமிழகத்தின் சிஸ்டத்தை யெல்லாம் மாற்ற முடியும் நம்பிக்கையூட்டப் பட்டு அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் ரஜினி. தமிழகத்திற்கு இது பொருந்தாத, சாத்தியப்படாத, பாஜக பயிற்சித்து தோற்று போன வகை முயற்சியே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,654
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



