Show all

மக்களைக் கவரும் ஆயத்த பேருந்து நிறுத்தம் திருச்சியில்

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சி ஆட்சியர் அலுவலக பழைய வளாகத்தில்  நகர பேருந்துகள் வந்து திரும்பும் பகுதியில் கான்கிரீட் ஆயத்த பேருந்து நிறுத்தம்  லாரியில் கொண்டு வரப்பட்டு நேற்று பொருத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்தில் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனை கோவையை சேர்ந்த கட்டுமான ஊழியர்கள் உருவாக்கியுள்ளனர். அடிமட்டம் தோண்டி, கம்பி கட்டி, கான்கிரீட் கலவையிட்டு, டைல்ஸ் பதித்து முழு வேலைபாடுகளுடன் காணப்பட்ட அந்த ஆயத்த கான்கிரீட் பேருந்து நிறுத்தம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதுதொடர்பாக கட்டுமான நிறுவன பொதுமேலாளர் வேலுமணி கூறியதாவது: ஆயத்த கான்கிரீட் கட்டுமானம் சாதாரண கட்டுமானத்தை விட 20 விழுக்காடு ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். செலவும் குறைவு. கழிப்பிடங்கள், கழிவுநீர் தொட்டி, குடிநீர் தொட்டி, சுரங்கப்பாதை, புதை வடிகால், சோதனை சாவடி, சிறிய மற்றும் பெரிய வீடுகள், சுற்றுச்சுவர், சாலை மைய தடுப்பு  என கட்டுமானங்களை உருவாக்கி தருகிறோம். கட்டுமானத்தை எளிதாகவும், வழக்கமான கட்டுமானத்துக்கு ஆகும் காலத்தைவிட மிக குறைந்த காலத்தில் முடித்து விடலாம். அதேபோல் எத்தனை பரப்பளவுக்கு, என்ன கட்டுமானம் வேண்டும் என்றாலும் அரை நாளில் பணியை முடித்து அடுத்த அரை மணி நேரத்தில் பயன்படுத்தலாம்.

திருச்சி மாவட்டத்துக்கு முதல் முறையாக ஒரு கான்கிரீட் ஆயத்த பேருந்து நிறுத்தத்தை அளித்துள்ளோம். இதனை எப்போதும், எங்கும் மாற்றிக்கொள்ளலாம். முதலீடு வீணாகாது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் கட்டுமானத்தில்  கனவு வீட்டை ஆயத்த கட்டுமானம் மூலம் கட்டிக்கொள்ளலாம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,657

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.