இந்த வருடம் நடைபெறும் பதினொன்றாவது IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்காக அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. அதற்க்கு பதிலாக குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன. அந்த அணிகள் 2018 ஆம் ஆண்டு முதல் பங்கேற்காது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் யார் யார் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்ற பெயரை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி தற்போது அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: மும்பை இந்தியன்ஸ்: டெல்லி டேர் டெவில்ஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சன் ரைஸர்ஸ் ஐதராபாத்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா.
ஸ்டீவ் ஸ்மித்
விராட் கோலி, டி- வில்லியர்ஸ் மற்றும் சர்பராஸ் கான்
ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா
கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர்
சுனில் நரைன் மற்றும் அந்த்ரே ரஸல்
வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமார்
அக்சார் பட்டேல்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



