Show all

நெடுவாசல் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புப் பேரணி

தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள், நெடுவாசல் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில்; பேரணி நடத்தினர்.

                நெடுவாசல் கிராமத்தில் கரிமச்சேர்மம் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள் பேரணி நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், கரிமச்சேர்மம் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இயற்கை சூழல் கெட்டு பாலைவனமாக மாறிவிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

                ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை அடுத்து மீத்தேன் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கியது. இந்த சூழலில், கரிமச்சேர்மம் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில் நெடுவாசலில் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள் இன்று பேரணி மேற்கொண்டனர். நெடுவாசலில் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சோழிங்கநல்லூரில் தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள் ஏராளமானோர் பேரணி சென்றனர். பதாகைகளுடன் தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.