கடந்த ஆண்டு நவம்பர்
மாதம் 8ஆம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று மோடி பாஜக அரசு அறிவித்தது.
இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுமக்கள்
தங்களிடம் இருந்த பழைய ரூபாய் தாள்களை, வங்கிகளில் மாற்ற குவிந்தனர். வங்கிகளிலும்,
ஏடிஎம்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளிலும் காத்திருக்கத் தொடங்கினர். அதனால் நாடு முழுவதும்
கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கள்ளுக்கோட்டை கிராமத்தைச்
சேர்ந்த கமலாம்பாள் என்ற மூதாட்டி, பழைய ரூபாய் நோட்டுக்களுடன் தவித்து வருகிறார். கீரை வியாபாரம் செய்து அவர், ரூ.8 ஆயிரம் சேமித்து
வைத்துள்ளார். ரூபாய் தாள்கள் விவகாரம் குறித்து, தனக்கு தெரியாது என்று வேதனையுடன்
தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவகத்தில் சாப்பிடச்
சென்ற அவர், பழைய ரூ.500 தாளைக் கொடுத்துள்ளார். அப்போது ரூபாய் தாள் செல்லாது என்று
கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். வங்கிகளிலும் பழைய ரூபாய் தாள்களை மாற்ற கால அவகாசம்
நிறைவடைந்ததால், ஆட்சியர் அலுவலகத்தில் வேதனையுடன் மனு அளித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



