Show all

உண்மைத் தகவல் மறைப்பு! தமிழிசையின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைப்பு

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில், தான் இயக்குனராக இருப்பதை தமிழிசை வேட்புமனு பதிகையில் மறைத்த காரணத்தால், தமிழிசையின் வேட்பு மனு மீதான பரிசீலனையைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் தமிழிசை பதிகை செய்த வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது திமுக.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இயக்குனராக தமிழிசை இருப்பதாகவும், அதை வேட்புமனு பதிகையில் குறிப்பிடவில்லை என்பதால் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பையடுத்து தமிழிசையின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.