Show all

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து எதிராக செயல்பட்டதாக கொறடா பரிந்துரை பேரில் தினகரன் ஆதரவு சட்;;;டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சட்டப்பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்தார், இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அறங்கூற்றுவர் துரைசாமி முன்பு கடந்த செப்.20 விசாரணைக்கு வந்தது.

உச்ச அறங்கூற்றுமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, அரியமா சுந்தரம் உள்ளிடோர் அணியமாகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர் துரைசாமி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி காலி என்று அறிவிக்கக் கூடாது என்றும், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பையும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

மேலும் ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என்ற தடை மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று தெரிவித்த அறங்கூற்றுவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவை செயலர் பூபதி, அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வரும் அக்.4 க்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் அறங்கூற்றுவர் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டதில் அறங்கூற்றுவர் துரைசாமிக்கு மாற்றாக ஹரிசந்திர பாபு இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இன்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் வழக்கில் தீர்ப்பளிக்கப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது பின்னர் தெரியவரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.