Show all

தமிழ்மகள் திவ்யாவிடமிருந்து தொடக்கம்! பாஜக தமிழகக் கிளையின் இரதயாத்திரை முயற்சிக்கு எதிர்ப்பு

பாஜக தமிழகக் கிளைத் தலைவர் முருகன் 234 தொகுதிகளுக்கும் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கணக்கீட்டுக்காக  வடஇந்தியப் பாணியில் இரத யாத்திரை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. 

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தை, இந்தியாவில் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டி தமிழ்மக்கள் நெஞ்சில் இடம் பிடித்திருக்கும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கொரோனா கவலைகளிலேயே ஆழ்ந்திருக்கும் நிலையில்-

ஹிந்தி பேசும் மக்களை கார்ப்பரேட்டுகளின் கையில் கல்வியறிவு பெறா கூலிகளாகவும், வேலை கிடைக்கும் இடங்களை கூட்டம் கூட்டமாக தேடிஅலையும் நாடோடிகளாகவும் பேணிக்காக்கும் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கிளையின் தலைவர் எல்.முருகன் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம். 

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் இன்னும் பரப்புரையை தொடங்காத நிலையில் இந்தியக் கார்ப்பரேட்டுகள் கைவிட்ட பாரதிய இராஷ்ட்ரிய காங்கிரஸ், இந்தியக் கார்ப்பரேட்டுகள் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த முறை முழு பாய்ச்சல் காட்டி வருகின்றன. 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பாரதிய ஜனதாகட்சியின் தமிழக கிளைத் தலைவர் எல்.முருகன். என்ற பேச்சு ஓடுகிறது. 

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்றாலும் கூட 234 தொகுதிகளுக்கும் பயணிக்க இருக்கிறார் முருகன். 

இந்தப் பயணத்தின் மூலம் எந்தெந்த தொகுதிகளில் கட்சியின் உறுப்பினர் பத்து பதினைந்து பேர்கள் கூடுதலாக இருக்கின்றனர் என்பதை நேரில் ஆராய்ந்து, அந்த தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடமும், டெல்லி மேலிடத்திலும் கொடுக்க இருக்கிறார் முருகன். அதன்மூலம் கூட்டணி பங்கீட்டின் போது இந்தந்த தொகுதிகள் வேண்டும் என நெருக்கடி கொடுக்கவாம். 

முருகனின் இந்த 234 தொகுதிகளுக்கான பயணம் வடஇந்தியப் பாணியில் இரத யாத்திராவாக முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் இரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் இரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் இரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.