காங்கிரசும் பாஜகவும்
ஒன்றுக் கொன்று அடிப்படைகளைத் தகர்த்துக் கொள்வதில்லை. திமுகவும் அதிமுகவும் செயலலிதா
அரசியலுக்கு வந்த காலம் முதல் அதையே வேலையாக வைத்துக் கொண்டுள்ளன. இந்தியா விடுதலை அடைந்த காலம் முதல் நீதித்துறையில்
தலையீட்டை நடுவண் அரசு இலாவகமாக மேற்கொண்டு
வருகிறது. நீதித் துறை மாநில அரசியலில் தலையிடுவதை மாநிலங்கள்
நடுவண் அரசுக்கு சோரம் போவதால் தடுத்துக் கொள்ள முடிவதில்லை. செயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதி தான் காரணம்
என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை காலம் கடந்த
ஞானோதயமாக செய்தி தெரிவித்துள்ளார். செயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதியே காரணம்
புது குண்டு போடும் தம்பிதுரை என்று ஊடகங்கள் செய்தி போடுகின்றன. சேலம் மாவட்டத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்த
வீரபாண்டியார் மீது அதிமுக நில அபகரிப்பு வழக்கு போட்டு மீளத் துயிலில் ஆழ்த்தியது. காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சி,
கட்சத்தீவு மீட்பு முயற்சி என மாநில உரிமைகளை நிலைநாட்ட நாற்பதும் நமதே என்று மக்களிடம்
ஆதரவு பெற்றிருந்த செயலலிதா அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போட்டு செயலலிதாவை
மீளத் துயிலில் ஆழ்த்தியது திமுக. செயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதி தான் காரணம்
என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒழிக்க திமுக மறைமுகமான
சதிகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரும்
அதிமுக மக்களவை துணைத்தலைவருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்
பேசினார். அப்போது செயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதிதான் காரணம் என அவர் குற்றம்
சாட்டினார். மேலும் அவர் பேசியதாவது, திமுகவினர் திட்டமிட்டே,
வேண்டுமென்றே அதிமுகவை ஒழிப்பதற்காக, மறைமுகமான சில சதி திட்டங்களைச் செயல்படுத்தி
வருகிறார்கள். செயலலிதா மீது எந்தக் குற்றமும் கிடையாது. இவர்கள்தான் வழக்கு தொடர்ந்து,
எப்படியாவது செயலலிதா சிறைக்குச் செல்ல வேண்டும். சிறைக்கு சென்றால் அந்த காலக்கட்டத்திலேயே
அவர் இறந்துவிடுவார் என்று திட்டமிட்டது. திமுக சதிதான் செயலலிதாவின் இறப்புக்குக்
காரணம். இவ்வாறு மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



