Show all

உலகுமுழுதும்வாழும் தமிழர்எண்ணிக்கையறிய ஆசை! சின்னச்சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டில் எத்தனை தமிழர் வாழ்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வீர்கள்.

இந்தக் கணிப்பு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழரின் குரலோசைக்கு வலிமை தருவதாகும்.

தேசிய மொழிகள் நான்கனுள் ஒன்றாக, தமிழும் சிங்கப்பூரில் இருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் தொகையுள் 7விழுக்காடு தமிழராக இருப்பதும் காரணம்.

மொரிசியசில் நாணயத் தாள்களில் தமிழ் வரிகள் உள்ளன எனில் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 10விழுக்காடு தமிழராக இருப்பதும் காரணம்.

அண்மையில் ஜனனி ஜனநாயகம் என்ற இளந்தமிழ்ப் பெண் தமிழர் வாக்குகளை நம்பி, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இரு நகராட்சிகளில் தகவல்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்குமளவுக்கு அந்த நகராட்சிகளில் கணிசமான தொகையினராகத் தமிழர் உள்ளதே காரணம்.

இவ்வாறாக, உலக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களித்து வரும் வேளையில் எந்தெந்த நாட்டில் எவ்வௌ;வளவு தமிழர் வாழ்கின்றனர் என்ற மதிப்பீடு, உலக வளர்ச்சியில் தமிழரின் பங்களிப்பை மதிப்பிட உதவும்.

உலகில் 235 ஆட்சிப் புலங்கள் இருக்கின்றன.

அவற்றுள் 39 புலங்களும் வேற்று நாடடுக்கு அடிமை நாடுகளாகவே தொடர்கின்றன.

196 நாடுகளும் இறைமையும் தன்னாதிக்கமும் உடைய நாடுகள்.

இவற்றுள், கொசோவோ, தைவான், பாலஸ்தீனம், வத்திக்கான் நகர், ஆகிய நான்கும் ஐநா. உறுப்புரிமை பெறாதவை. எஞ்சிய 192 நாடுகளும் ஐநா. உறுப்புரிமை பெற்றவை.

இந்த 235 ஆட்சிப் புலங்களிலும் தமிழ் மரபு பேணுவோர் எத்தனை ஆட்சிப் புலங்களில் வாழ்கின்றனர்?

ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் வாழ்கின்றனர்?

தோராயமாகவாவது கணக்கு உண்டா?

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வாழும் தமிழர் தொகை பற்றிய கணக்கு எவரிடமும் உண்டா?

153 நாடுகளில் வாழும் 93,805,905 (ஒன்பது கோடியே முப்பத்து எட்டு லட்சத்து ஐந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐந்து) என்கிற பட்டியல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப் பட்டது.

மொத்த மக்கள் தொகை விவரம் ஐநா. மக்கள் தொகை அமைப்பு தந்ததுதாம்.

1. அங்கோலா- 10

2. அமெரிக்கஐக்கிய மாநிலங்கள்- 200,000

3. அயர்லாந்து- 2,000

4. அர்ஜென்ரினா- 100

5. அல்ஜீரியா- 100

6. அன்ரிகுவா-பார்புடா- 1,000

7. ஆப்கானிஸ்தான்- 100

8. ஆர்மினியா- 300

9. ஆஸ்திரியா- 1,500

10. ஆஸ்திரேலியா- 100,000

11. இத்தாலி- 5,000

12. இந்தியா- 81,000,000

13. இந்தோனீசியா- 300,000

14. இலங்கை- 6,000,000

15. இஸ்ரேல்- 100

16. ஈராக்- 1,000

17. ஈரான்- 500

18. உகண்டா- 100

19. உக்ரெயின்- 500

20. உஸ்பெகிஸ்தான்- 300

21. எகிப்து- 1,000

22. எதியோப்பியா- 100

23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு- 200,000

24. எரித்திரியா- 100

25. எல்சால்வடோர்- 100

26. எஸ்ரோனியா- 500

27. ஐஸ்லாந்து- 25

28. ஓமான்- 29

30. கயானா- 10,000

31. கனடா- 300,000

32. கஸாக்ஸ்தான்- 100

33. காட்டார்- 10,000

34. கானா- 500

35. கியூபா- 100

36. கிர்கிஸ்தான்- 100

37. கிரிபாத்தி- 25

38. கிரேக்கம்-10,000

39. கினீயா- 1,000

40. கினீயா- பிஸ்ஸாவ்- 100

41. குரோசியா- 100

42. குவாதமாலா- 100

43. குவைத்- 10,000

44. கென்யா- 300

45. கொங்கோ சயர்- 25

46. கொமொறொ 100

47. வடகொரியா, 100

48. தென்கொரியா- 500

49. கொலம்பியா- 500

50. சமோவா- 100

51. சவூதி அரேபியா- 50,000

52. சாம்பியா- 2,500

53. சான் மறினோ- 25

54. சிங்கப்பூர்- 300,000

55. சிம்பாப்வே- 250

56. சியாரா லியோன-; 1,000

57. சிரியா- 500

58. சிலி- 100

59. சீசெல்சு- 9,000

60. சீனா- 5,000

61. சுரினாம்- 130,000

62. சுலோவாக்கியா- 100

63. சுலோவேனியா- 100

64. சுவாசிலாந்து- 5,000

65. சுவிற்சர்லாந்து- 60,000

66. சுவீடன்- 12,000

67. சூடான்- 100

68. செக்- 100

69. செர்பியா- 200

70. செனகல்- 25

71. சைப்ரஸ்- 500

72. சோமாலியா- 25

73. டென்மார்க்- 15,000

74. தஜிக்கிஸ்தான்- 100

75. தாய்லாந்து- 10,000

76. தான்சானியா- 250

77. துர்க்மெனிஸ்தான்- 50

78. துருக்கி- 500

79. துனீசியா- 100

80. தென் ஆபிரிக்கா- 750,000

81. தைவான்- 100

82. நமீபியா- 25

83. நவுறு- 100

84. நியுசிலாந்து- 30,000

85. நெதர்லாந்து- 12,000

86. நேபாளம்- 500

87. நைஜர்- 25

88. நைஜீரியா- 2,500

89. நோர்வே- 15,000

90. பராகுவே- 25

91. பல்கேரியா- 200

92. பனாமா- 500

93. பஹ்ரெயின்- 7,000

94. பஹாமாஸ்- 200

95. பாகிஸ்தான-; 1,000

96. பாபுவா-நியுகினீயா- 500

97. பார்படாஸ்- 1,000

98. பாலஸ்தீனம்- 200

99. பிரான்ஸ்- 50,000

100. பிரிட்டன்- 300,000

101. பிரெஞ்சு கயானா பிரா- 1,000

102. பிரேசில்- 100

103. பிலிப்பைன்ஸ்- 200

104. பின்லாந்து- 3,000

105. பிஜி- 125,000

106. புர்கினோ பாசோ- 100

107. புறுணை- 1,500

108. பூடான்- 100

109. பெர்முடா பிரி- 100

110. பெரு- 100

111. பெல்ஜியம்- 12,000

112. பொலிவியா- 1,000

113. பொற்சுவானா- 1,000

114. போர்த்துக்கல்- 500

115. போலாந்து- 500

116. மசிடோனியா- 100

117. மலாவி- 500

118. மலேசியா- 2,250,000

119. மால்ரா- 100

120. மாலி - 250

121. மாலை தீவு- 2,000

122. மியான்மா- 600,000

123. மெக்சிகோ- 3,000

124. மொல்டோவியா- 25

125. மொறிசியசு- 126,000

126. மொறித்தானியா- 100

127. மொறொக்கோ- 100

128. மொனாகோ- 50

129. யப்பான்- 200

130. யேமன-; 500

131. ரஷ்யா- 5,000

132. ரினிடாட்-ரொபாகோ- 100,000

133. லக்செம்போர்க்- 1,000

134. லற்வியா- 500

135. லாவோஸ்- 1,000

136. லிதுவானியா- 100

137. லிபியா- 500

138. லெசொத்தோ- 500

139. லெபனன்- 5,000

140. லைபீரியா- 500

141. வங்காள தேசம்- 1,000

142. வத்திக்கான் நகர்- 20

143. வியற்னாம்- 3,000

144. ஜமைக்கா- 30,000

145. ஜிபுற்றி- 1,000

146. ஜெர்மனி- 40,000

147. ஜோர்டான்- 4,000

148. ஜோர்ஜியா- 25

149. ஸ்பெயின்- 500

விடுதலை பெறா ஆட்சிப் புலங்கள் நான்கைப் பார்ப்போம்.

1. சானல் தீவுகள் பிரி- 25

2. நியு கலிடோனியா பிரா- 500

3. றியுனியன் பிரா- 500,000

4. ஜிப்றால்ரர் பிரி- 25

தமிழர் தொகை பற்றிய இந்தக் கணிப்பு மேலும் திருத்தம் பெற நம்மில் முடிந்த அனைவரும் முயலலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.