18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கர மடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. காஞ்சி மடம், வரலாற்று ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் குழப்பத்தின் பிறப்பிடமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதாகினர். பின்னர் இருவரும் வழக்கிலிருந்து அறங்கூற்றுமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்து சர்ச்சைகள் நிறைய உண்டு. சிலர், இந்த மடம் கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக நிறுவப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது என்கின்றனர். காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதை அடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும், தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு சிக்கலில் உள்ள விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீவிஜயேந்திர பெயரும் சேர்க்கப்பட்டது. 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்காக கைதாகி பின்னர் விடுதலையானார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே அவர் அவமதித்ததாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மதவாதப் பெரியவர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



