21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியை திரும்பிச் செல் என்ற தமிழகம், 'வாருங்கள் மோடி' என்று கூறும் காலம் விரைவில் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மோடி அண்மையில் தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி உலக வரலாற்றுச் சாதனை நிகழ்த்தின. எதிர்வரும் திங்கட் கிழமை அமித்ஷா தமிழகம் வரவுள்ள தகவலை தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழகம், 'கம் பேக் மோடி' என சொல்லும் காலம் விரைவில் வரும் என தெரிவித்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,839.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



