Show all

போராடத் தெரிந்த தமிழ் மக்களுக்கு! கால்நடை மருத்துவமனை கட்டவும் முடியும்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஊத்துக்குளி சாலையில் உள்ளது சிறுகளஞ்சியம் கிராமம். 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பே முதன்மைத் தொழிலாக இருக்கிறது.

அப்பகுதியில் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை, நிரந்தர கட்டடம் இல்லாததால் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், உழவர்கள் சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர்.

கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறும் அப்பகுதி மக்கள், கிராம மக்களே ஒன்றிணைந்து நிதி திரட்டி, கால்நடை மருத்துவமனைக்கான கட்டடத்தை கட்டியதாக பெருமிதம் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறும் சிறுகளஞ்சியம் கிராம மக்கள், மக்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,857. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.