07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சார்லி சாப்ளின் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் மறுபதிப்பு செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான சார்லி சாப்ளின் 2 படத்தை அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கிறது. முதல் பாகத்தின் கதைத்தலைவரான பிரபுதேவாவே இதிலும் கதைத்தலைவராக நடிக்கிறார். கதைத்தலைவியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அதா சர்மாவும் நடிக்கிறார். மீண்டும் நடிகர் பிரபு இப்படத்திலும் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் தயாரிப்பாளர் டி.சிவா முதன்மை வேடமேற்க கௌரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார். இவையெல்லாம் ஒரு புதுப் படத்திற்கான வழக்கமான செய்திகள். இந்தப் படத்;தின் ஒரு சிறப்பான செய்தி என்னவென்றால், விஜய் தனியார் தொலைக்காட்சியில் சிறந்த பாடகர்களுக்கான போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணை பாடிய 'சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள' மிகப் பிரபலமான பாரட்டிற்குரிய பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி இணையால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு மக்கள் பாராட்டைப் பெற்ற பாடல். அவர்களை வைத்தே திரைப்படத்தில் பாட வைத்துள்ளார்கள். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. வெற்றிப் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் சாதிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர்சக்தி சிதம்பரம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,857.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



