06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநாட்டில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என கூறினார். புரிதலோடு கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று சத்யராஜ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பெரியார் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தை ஏற்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது என்றும் அப்படி நம்பினால் அது தவறு என்றும் சத்யராஜ் தெரிவித்தார். பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள அச்;சத்தில் நடிகர் சத்யராஜின் இந்த கருத்தைத் தெரிவித்திருந்தாலும், தமிழக மக்களைப் பற்றி அப்படியெல்லாம் கணக்குப் போட்டுவிடக் கூடாது என்பதுதாம் உண்மை. தமிழக மக்கள் கலைத் துறையில் இருப்பவர்களைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்பதால் தான் அவர்களுக்கு உடனடியாக ஓரளவுக்கு ஆதரவு தருகிறார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் பற்றிய தகவல்களை மக்கள் தேடிப் பிடித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் வெளியில் இருந்து வருபவர்களை உடனடியாக தமிழ் மக்கள் கணிசமாக ஆதரிப்பதில்லை. பொறுமை காத்து தம்மை நிரூபித்தால் தமிழ் மக்கள் யாரையும் ஏற்றுக் கொள்வார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



