சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தந்தை மற்றும் மகன் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிகழ்வில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவல்துறையினர் இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறது. இந்தியா முழுவதும் இந்த வழக்கின் மீதான அனுதாபம் கூடி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த வழக்கில் நியாயம் கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறார். திமுகவும், தமிழக முதல்வரும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்கின்றனர். சமூக வலைதளம் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கருத்;துக்களையும் கண்ணீரையும் காணிக்கையாக்கி வருகிறது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்களின் மீது குற்றத்தின் அளவைக் கூடிக் கொண்டே இருக்கிறது. பாதிக்கப் பட்டவர்கள் மீதான நற்சான்றிதழ்கள் குவிந்து கொண்டேயிருக்கின்றன. இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணை நடுவண் குற்றப்புலனாய்வு வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி முன்னதாக தெரிவிதிருந்தார். இந்த வழக்கை உடனடியாக நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்திருப்பது இந்தக் காவலர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு அன்னியமாக இருப்பதை புலப்படுத்துகிறது. இதற்கு முன்னரே ஸ்டெர்லைட் தாமிரஆலைப் போராட்டத்தில் இந்த மண்ணில் 13 உயிர்கள் பலி கொள்ளப்பட்டதே. அதிலும் கூட தமிழக அரசு அன்னியப்பாடாகவே அமைய காவல்துறையினரின் தன்னிச்சையான ஊக்கமாகவே தெரியவந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்திருக்கிற முன்னெடுப்பில்- அரசின் கொள்கை முடிவுகளில் அறங்கூற்றுமன்றம் தலையிட முடியாது என உயர்அறங்கூற்றுமன்றம் நேற்று கருத்து தெரிவித்திருந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



