நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து ஓட்டு போட்டதை, இது பயணம் அல்ல.. பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்கு எதிரான ஒர் அறிக்கை என்று பதிவிட்டு, அவரது கொண்டாடிகள் இதைக் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கி மகிழ்ந்து வருகின்றனர். 24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விறுவிறுப்புக்குச் சுறுசுறுப்பு ஊட்டும் வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குபதிவு மையத்துக்கு நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்திருந்தார். வழிநெடுகிலும் விஜய்யின் கொண்டாடிகள் விஜய்யை பாராட்டி மகிழ்வதற்கு சுறுசுறுப்பானார்கள். பாஜக ஆட்சியில் தொடரும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்ததாக வந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு பாஜகவிற்கு எதிராக கடுப்பேற்றியும் கருத்துப் பரப்புதல் செய்தும் வருகின்றார்கள். இது பயணம் அல்ல.. ஒர் அறிக்கை.. (ஸ்டேட்மென்ட்) சரியான நேரத்தில் இதை சொல்லியுள்ளார், என்று விஜய்; கொண்டாடிகள் கீச்சுவில் கூறுவதை சுவைக்க முடிகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்ற பகுப்பின் கீழாக கீச்சுவில் பதிவுகள் அணிவகுத்து இந்திய அளவில் முதலிடத்தில் தலைப்பாகி வருகிறது. விஜய் மிதிவண்டியில் வாக்களிக்க வந்தபாடு தற்போது இந்திய அளவில் பேசு பொருளாகி விட்டது. இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.