Show all

தொடங்கியது தமிழகத்தில் சிகிச்சைஅமித்ஷா! சிகச்சை பலனளிக்குமா? #திரும்பிப்போஅமித்ஷாவை தாண்டி

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னைக்கு அமித்ஷா வந்ததே, வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் அமித்ஷா சிகிச்சைக்கு தானாம். 

நாடளுமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணி, அதற்கான மேலிடத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றை தெரிவித்து அவர்களுக்குள் உத்வேகத்தைத் தூண்டுவதற்கான பணியை செவ்வனே முடித்துச் சென்றதாக பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். 

அமித்ஷா. நேற்று 12 மணிக்கு தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து மாலை 3.30 மணிக்கு தேர்தலின் பொறுப்பாளர்களைச் சந்தித்து பேசினார். பின்னர் தமிழக பாஜகவின் மகா சக்தி கேந்திர மற்றும் சக்தி கேந்திரம் ஆகியவற்றின் பொறுப்பாளர்களைச் சந்தித்தார். 

இதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள நாடளுமன்றத் தேர்தல் பாஜக நிர்வாகிகளையும் இரவு 10 மணிக்கு அந்தமான் லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களையும் சந்தித்தார் இதைத் தொடர்ந்து அவர், சிகிச்சை அமித்ஷா முடித்து டெல்லி புறப்பட்டார். 

இதனிடையே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவே திரும்பி போ என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் இணைய அர்வலர்கள் கருத்துகளை பதிவு செய்து அதை டிரென்டாக்கியது குறிப்பிடத்தக்கது. மோடி சென்னை வரும் போதும் இதே போன்ற எதிர்ப்பு இருந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,844.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.