Show all

டெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

     கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது.

     அப்போது திமுகவினர்களின் அமளி துமளியைக் கண்டு கொள்ளாமல் வெளியேற்றி விட்டு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்து விட்டார்.

     தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து புகார் தயார்செய்து கொண்டு குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

     அங்கு நேற்று மாலை குடியரசுத் தலைவரைச் சந்தித்து புகார் தெரிவித்த ஸ்டாலின், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

     காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

     இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் மற்றும், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது தங்களின் அடவடிக்கு தாங்கள் எதிர்அடாவடி மேற்கொள்ளாத பிடிவாதம் குறித்து ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் இன்றைய அரசியல் சூழல்குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

     எப்படியாவது தமிழக ஆட்சியைக் கலைக்க அடுத்து ஸ்டாலின் யாரையெல்லாம் சந்திப்பாரோ!

     அவங்க அப்பா கலைஞர் ஐயா, கட்சத் தீவு பிரச்சனையில இந்த அளவு முயற்சி எடுத்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்!


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.