நடிகர் பிரசன்ன அவர்கள் கீச்சு பதிவிட்டு தெரிவித்த, தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி கணக்கிட்டு வசூலிக்குமானால் ‘இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபட்டதாகி விடுமே’ என்கிற ஐயம் நியாயமானது. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற ஐயமே அது. அதற்கான விளக்கத்தையும், உரிய முறையில் கணக்கீட்டையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டியது அதன் முறையான நிருவாகக் கடமையேயாகும். 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் பிரசன்ன அவர்கள் கீச்சு பதிவிட்டு தெரிவித்த, தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி கணக்கிட்டு வசூலிக்குமானால் ‘இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபட்டதாகி விடுமே’ என்கிற ஐயம் நியாயமானது. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற ஐயமே அது. அதற்கான விளக்கத்தையும், உரிய முறையில் கணக்கீட்டையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டியது அதன் முறையான நிருவாகக் கடமையேயாகும். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது கீச்சுப் பதிவில் தெரிவித்தார். இது தொடர்பாக பிரசன்னா “இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார். பிரசன்னாவின் இந்த கீச்சைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் பலரும் எங்கள் வீட்டிலும் மின்கட்டணம் அதிகம் தான் என்று பதிவிடத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் இந்த முன்னெடுப்பு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நமது பாராட்டு. நாம் ஒரு மாநிலக்கட்சியின் ஆட்சியில்தாம் இருக்கிறோம் என்கிற பாதுகாப்பு உணர்வை மீட்டுக் கொடுத்ததற்கு. கொரோனா நமக்கு உணர்த்தும் முதல்செய்தியே:- ஒரேநாடு ஒரே கதைப்பாடு என்கிற, மாநிலத் தொடர்பில்லாத, சமூக அச்சம் கொஞ்சமும் இல்லாத நடுவண் பாஜக பேசுகிற ஒருமைப்பாடு என்கிற அடிமைப்பாட்டிற்கு சோரம் போய்விடாதீர்கள். கொரோனா போன்ற ஒரு பாதிப்பு வந்தால் அவர்கள் விலகியே நிற்பார்கள் என்பதுதான். நடுவண் அரசு அறிவிக்கிற, இந்தியக் கட்டுபாட்டு வங்கி அறிவிக்கிற கடன் தவணையை மூன்று மாதம் கட்டவேண்டாம் என்று இப்போது தெரிவித்து விட்டு- கடனின் இறுதியில் மூன்றை முப்பதாக வசூல் நடத்தப் போகிற கொள்ளையடிப்பை- திமுகவாக இருந்தாலும் சரி, பேரறிமுகமான எம்ஜியார் செயலலிதா காலத்து அதிமுகவாக இருந்தாலும் சரி, இன்றைய எளியஅறிமுகத்தினராக ஆட்சியேறியுள்ள எடப்பாடியாராக இருந்தாலும் சரியே செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நமக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை நடிகர் பிரசன்ன போல ஒருவர் அறிக்கை விட்டே பாதிக்க முடியும். அதனால் அவர்களுக்கு சமூக அச்சம் இருக்கிறது. இதைதாம் புரிய வைக்கிறது கொரோனா. மேற்கண்ட வங்கிக் கணக்கை எத்தனையோ பொருளாதார அறிஞர்கள் தெரிவித்தாகி விட்டது. இராகுல் காந்தியே சொன்னாலும் நடுவண் அரசு காது கேளாத மாற்றுமுறைத் திறனாளி காதில் ஊதிய சங்காக சமூக அச்சம் இல்லாமல் தெனாவெட்டு காட்டும். தொலைக்காட்சியில் ஹிந்தியில் மட்டும் ஊரடங்கு குறித்து கலந்துரையாடும். மசோராம் முதல்வர் சொரம்தங்கா சர்ச்சையாக்கினாக்கினாலும் காது கேட்காது. நடிகர் பிரசன்னாவின் கீச்சுவுக்கு விளக்கமளித்து தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், வீட்டுப் பயன்பாட்டை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவிவரும் கரோனா பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும். மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்.328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் அலகு 2280 மின் நுகர்வுக்கு ரூ.13,528-ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528- நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை. மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6920 அலகு என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6920 அலகை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152 ஆகும். ஆனால் செய்தி குறிப்பில் கூறியுள்ளபடி 6920 அலகானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3460 அலகு, வீதப்பட்டியலின்படி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. 3460 அலகுக்கான மின் கட்டணம் ரூ.21,316 ஆகும். ஆக இரண்டு 3460 அலகுக்கான மின் கட்டணம் ரூ.42,632 ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528 கழிக்கப்பட்ட பின் ரூ.29,104 மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528 ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632 ஆக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு “இரு- இரண்டு” மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், நான்கு மாதங்களுக்கும் சேர்த்து கணக்கிட்டு கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். உறுதியாக இரு- இரண்டு மாதங்களுக்கே கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் ஐயங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



