Show all

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.      திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் நடைபெறும் விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீர்ம குடும்ப அட்டைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி, தொடங்கி வைக்கிறார்.

     ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 ஆயிரம் என தமிழகம் முழுவதும் 15 லட்சம் சீர்ம குடும்ப அட்டைகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

     குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்பேசி எண்கள், இந்த சீர்ம குடும்ப அட்டைகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன. கையடக்க வடிவில் இருக்கும் இந்த மின்னணு சீர்ம குடும்ப அட்டையில், முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரையுடன்,

‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை’

என, அச்சிடப்பட்டிருக்கும்.

இதில், கியூ-ஆர் ரகசியக் குறியீடும் இருக்கும். இந்தச் சீர்ம குடும்ப அட்டையைத் தேய்த்துப் பொருள்களை வாங்க வேண்டும்.

     வாங்கிய பொருள் குறித்த விபரங்கள் குறுஞ்சேதியாக நாம் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.