Show all

உடல்நலக் குறைவோடுதான் செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்: பேஷன்ட் கேர் அறிக்கை

செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் தலையாய அறிக்கையான பேஷன்ட்கேர் அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

அதன்படி செப்டம்பர் 22 அன்று 10.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஜெயலலிதா நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு ஆகியவை அதிகரித்து இருந்ததாகவும், ஜெயலலிதா மயங்கிய நிலையிலேயே இருந்ததும் தற்போது அந்த அறிக்கையில் இருந்து தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவாலேயே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 72 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததார். செயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.

செயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா குடும்பத்தினர் தாக்கியதாக பன்னீர் அணியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

செயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய பன்னீர் தரப்பு இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் செயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம்; அமைக்க உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்நிலையில் பேஷன்ட் கேர் அறிக்கை, உடல்நலக் குறைவோடுதான் செயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.